திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாவட்ட சித்த மருத்துவம் சார்பில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நூறு பேர் தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கரோனா சிறப்பு மருத்துவ முகாமில், தற்போது 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மையத்தில் மாவட்ட நிர்வாகம் சரிவர உணவு விநியோகிப்பது இல்லை எனவும், இது குறித்து புகார் அளித்தாலும் மருத்துவர்கள், செவிலியர் அலட்சியமாகப் பதில் அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.