சென்னை மாநகராட்சியில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவர், தனது கணவர் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் திருப்பூருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா கொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து திருப்பூர் திரும்பிய பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா - திருப்பூர் கரோனா செய்தி
திருப்பூர்: சென்னையிலிருந்து திருப்பூர் திரும்பிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
Corona issue Tiruppur north station closed
இதையடுத்து, அவரின் கணவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. இருப்பினும், அவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு காவல் நிலையம், ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதாலும், காவலர்களிடையே தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கிலும் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.