திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
திருப்பூரில் இன்று 100 பேருக்கு கரோனா உறுதி
திருப்பூர்: இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,557ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,557ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 26 பேர் குணமடைந்தனர். அதேபோல, கரோனா தொற்று சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 28) மட்டும் இருவர் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. மேலும் 757 பேர் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.