திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுதிநேர ரேசன் கடை திறப்பு மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கால்நடைப் பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ரேசன் கடையை திறந்து வைத்து, சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
'திருப்பூரில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது' - உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
minister-udumalai-radhakrishnan
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம், “திருப்பூர் மாவட்டத்தில் கரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிசிச்சை அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக உள்ளது. திருப்பூரில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யபட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தை பிடிக்கும் - உடுமலை ராதாகிருஷ்ணன்!