திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு சென்னையிலிருந்து பணிமாறுதல் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் நேற்று பணிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
2 எஸ்ஐகளுக்கு கரோனா; காவல் நிலையங்கள் மூடல்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்: வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் இரு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பணியாற்றிய காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
Corona confirms to Assistant Police Inspectors; Police stations to be closed
அதேபோல் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இருவரும் பணியாற்றிவந்த காவல் நிலையங்கள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன.