தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதனால் மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திவருகிறது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் உணவகம் ஒன்று மாஸ்க் வடிவிலான புரோட்டா, கோவிட் 19 வைரஸ் வடிவில் தோசை ஆகியவற்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவகத்தினர் தரப்பில், உணவருந்த வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்பதற்காக மாஸ்க் வடிவிலான புரோட்டாவை தயார் செய்து பரிமாறி வருவதாக தெரிவித்தனர்.
மாஸ்க் புரோட்டா, கோவிட் 19 தோசை என அசத்தும் உணவகம் அதேபோல் கரோனா வைரஸ் பரவலை தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி, மிளகு, பூண்டு , மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட எதிர்ப்பு சக்தி உணவுப் பொருள்களை கொண்டு கோவிட் 19 தோசையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். தற்போது பொதுமக்களிடையே இந்தப் புதிய விழிப்புணர்வு முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!