திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் கனரக வாகனங்களை உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இன்று மட்டும் 14 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. அதேபோல் மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணம் சென்றடையும் வகையில் பணியாற்றி வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
திருப்பூரில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்! முன்னதாக, பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்காக வழங்கிய காசோலைகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க :கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்க வேண்டும் - ஸ்டாலின்