தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு: தேர்தலைச் சுட்டிக்காட்டி அதிமுகவை எச்சரித்த அழகிரி!

திருப்பூர்: இந்த ஆண்டில் நீட் தேர்வு விலக்குப் பெறவில்லை என்றால் அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதே மிகவும் சிரமம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரித்துள்ளார்.

Congress State President K.S.Alagir Comments on NEET Issue
Congress State President K.S.Alagir Comments on NEET Issue

By

Published : Aug 20, 2020, 1:37 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நீட் தேர்வு அச்சம் காரணமாக கோவையில் நேற்று மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் மூலம் தேர்வைக் கண்டு மாணவ, மாணவிகள் அச்சப்படக்கூடிய சூழல் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. மாணவர்களிடையே தேர்வை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்ததுபோல விருப்பப்படுகின்ற மாநிலங்களில் மட்டும் நீட் தேர்வை வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்திப்பு

அதிமுக அரசு மத்திய அரசிடம் பேரம் பேசியோ, போராடியோ உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் அதிமுக இந்த முறை தேர்தலை சந்திப்பதே பெரும் சிரமமாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை - கோவையில் மற்றொரு அனிதா?

ABOUT THE AUTHOR

...view details