தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் நானும் தமிழன்தான்' - ராகுல் காந்தி! - Tirupur District Latest News

திருப்பூர்: இரண்டாம் நாள் சுற்று பயணமாக திருப்பூர் வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு ஊத்துக்குளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Rahul Gandhi election campaign
Rahul Gandhi election campaign

By

Published : Jan 24, 2021, 1:20 PM IST

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் மூன்று நாள் சுற்று பயணத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இதற்காக, நேற்று(ஜன.23) காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

முதல் நாளான நேற்று (ஜன 23) கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில்துறையினர், தொழிலாளர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று (ஜன 24) திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்

இதையொட்டி, திருப்பூர் வந்த ராகுல் காந்திக்கு ஊத்துக்குளியில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மக்களிடையே பேசிய அவர், 'தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் நானும் தமிழன் தான்’. தமிழ்நாட்டின் கலாசாரத்தை மதிக்கிறேன். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கே வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் ஊத்துக்குளி மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்றார்.

இதையும் படிங்க: சாலையோர கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details