தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்

திருப்பூர்: அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Communist party protest condemning the administration of Tirupur Corporation
Communist party protest condemning the administration of Tirupur Corporation

By

Published : Nov 10, 2020, 2:19 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட முதலாவது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வார்டு எண் 1 முதல் 15ஆம் தேதிவரை பத்து நாள்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படுவதில்லை. சாலை விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. அவற்றை பழுது பார்க்கவும் மாநகராட்சி முன்வரவில்லை.

இவை தொடர்பாக பலமுறை மாநகராட்சி மற்றும் மண்டல நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஆர்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மண்டல அலுவலகத்தினர் உடனடியாக கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 10%ஆக போனஸ் குறைப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details