தமிழ்நாட்டில் கடந்த 15 தினங்களில் கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதைக் கண்டித்தும், மின்வாரியத்தில் வேலைவாய்ப்புகளை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று(டிச.18) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிலிண்டருக்கு இறுதி சடங்கு: மா.கம்யூ நூதன ஆர்ப்பாட்டம்! - gas cylinder price hike
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு இறுதி சடங்குகள் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
அப்போது கேஸ் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கிற்கான பூஜைகள் செய்யப்பட்டு, மத்திய,மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மின்வாரிய பணிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.