திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி கவுசல்யா, மகள் பிரபாவதி (கல்லூரி மாணவி) ஆகியோர் இன்று காலை 6 மணியளவில் உடுமலை புக்குளம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சாலையில் அவர்களுக்கு பின்னே அதிவேகமாக வந்த மினி வேன் மூவரின் மீதும் வேகமாக மோதியதில் தூக்கியெறியபட்டனர். மூவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.