தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை...!' - Collector Vijaya Karthikeyan's Press Meet

திருப்பூர்: கரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

collector inspection bus stand_vis மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு விஜய கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு திருப்பூர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு Thiruppur Collector Vijaya Karthikeyan's Press Meet Collector Vijaya Karthikeyan's Press Meet Vijaya Karthikeyan's Press Meet
Collector Vijaya Karthikeyan's Press Meet

By

Published : Mar 25, 2020, 8:56 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாகத் தமிழ்நாடு அரசு மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து மாவட்ட எல்லைகளை முடக்கினர்.

அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வந்த பொதுமக்களைக் காவல் துறையினர் எச்சரித்து திருப்பியனுப்பி அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகரப் பகுதிகளில் செய்யப்பட்டுவரும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்ய மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 178 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைச் சுகாதாரத் துறை அமைச்சர் முன்பே தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு

பொதுமக்களிடையே வீணாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அதை மீறி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார். வீடில்லாத ஏழைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டுச் சமையல் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details