திருப்பூர் அரசு மருத்துவமனை, ரயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இத்தாலி, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து திருப்பூர் திரும்பிய 19 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடத்தில் கரோனா வைரஸ் தொற்று இல்லை. வெளிமாநிலத்திலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வேலைக்காக வந்திருக்கும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் எந்த ஒரு நபரும் இல்லை" என்றார்.