திருப்பூர்:கோயம்புத்தூர் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் செட்டிபாளையம் பேரூராட்சியின் பத்தாவது வார்டு திமுக கவுன்சிலராகவும் மற்றும் திமுக வட்டச் செயலாளராகவும் பதவியில் இருந்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று (நவ 12) இரவு சந்தோஷ், இந்துமதி மற்றும் குழந்தையுடன் கோயம்புத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ கார் எதிர்பாராத விதமாக இவர்கள் காரின் மீது வேகமாக மோதியுள்ளது.