திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் 510 ரூபாயை கூட தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க மாநகராட்சி மறுத்து வருகிறது.
நிலுவை சம்பளம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்! - tiruppur district news
திருப்பூர்: நிலுவை சம்பளத் தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
எனவே, உடனடியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் போனஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் இன்று (அக்டோபர் 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்: பாஜகவினர் கைது