திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் டீ விற்பனை செய்துவருபவர் திருநாவுக்கரசு. இவர் வழக்கமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்களில் வரும் பயணிகளுக்கு டீ விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4.20 மணிக்கு திருவனந்தபுரத்திலுருந்து கோரக்பூர் செல்லும் 12512 ரப்திசாகர் எக்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது வழக்கமாக ரயிலில் இருந்த பயணிகளுக்கு திருநாவுக்கரசு டீ விற்பனை செய்தார். இதைப் பார்த்த ரயில் பான்ட்ரிக்கார் ஊழியர்கள் ஒன்று திரண்டு திருநாவுக்கரசை பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து இருதரப்பிற்குமிடையே தகராறு நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. அதையடுத்து ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்த அவசர சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி, ரயில்நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ரயிலில் டீ விற்பவர்களுக்கிடையே மோதல் இதையடுத்து ரயிலவே காவலர்கள் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காராணமாக சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக கோரக்பூர் ரயில் புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: குன்னூர் மலை ரயில் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு