தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த 43 நாள்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தற்போது மதுபானக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு உட்பட்ட கரைப்புதூர், அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் மதுபானக் கடைகள் மூட வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையை முற்றுகையிட சென்றனர்.
இதற்கிடையில், காவல்துறையினர் அந்த சிறுவர், சிறுமியர்களைத் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் பல்லடம் வட்டாட்சியரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அதில், ”கரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாமல், உணவுக்கே வழி இல்லாமல் தவித்து வருகிறோம்.