திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் பகுதியிலுள்ள கோழி பண்ணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில், ரீட்டா தம்பதி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (அக்.29) கர்ப்பிணியான ரீட்டாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளனர்.
விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ரீட்டாவை ஏற்றிகொண்டு செல்லும் போது, வலி தாங்காமல் கடுமையாய் அவர் அலற வாகனம் ஓரத்தில் நிறுத்தபட்டது.
தாயையும், சேயையும் காப்பாற்றிய செவிலியர் இதனிடையே ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் பர்ஹானா பர்வீன் சாமர்த்தியமாக செயல்பட்டு, தனி ஆளாக ரீட்டாவிற்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் நலமுடன் காப்பாற்றினார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அசாதாரணமான சூழலில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர் சாமிகண்ணையும், சாமர்த்தியமாக செயல்பட்ட செவிலியர் பர்ஹானா பர்வீன் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: சாக்கடை நீரில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள்