தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவரொட்டிகளில் இறையன்புவின் புகைப்படம்: திமுகவினர் செயலால் பொதுமக்கள் அதிருப்தி - chief secretary Iraiyanbu posters

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தலைமை செயலர் இறையன்புவின் படம் அடங்கிய சுவரொட்டிகளை பொது இடங்களில் திமுகவினர் ஒட்டியுள்ளனர்.

chief secretary Iraiyanbu posters stuck at tiruppur
chief secretary Iraiyanbu posters stuck at tiruppur

By

Published : Jul 26, 2021, 5:16 PM IST

திருப்பூர்:பல்லடத்தில் பேருந்து நிலையம், கோயில் சுவர்கள் போன்ற இடங்களில் அரசு தலைமை செயலர் இறையன்புவின் படம் இடம்பெற்றிருக்கும் வகையில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கும் தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எம்எல்ஏ உதயநிதி, அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

திமுகவினர் செயலால் பொதுமக்கள் அதிருப்தி திமுகவினர் செயலால் பொதுமக்கள் அதிருப்தி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவே அலுவலர்கள் உள்ளனர். இதுபோன்ற திமுகவினரின் சுவரொட்டிகள் அலுவலர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் குறைந்துவிடும்" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் - கே.பாலகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details