திருப்பூர்:விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தின் காரணமாக ஆதாரம் இல்லை என நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கு குறித்து பேசிவருகிறார். நீதிமன்றம் எங்களை விடுதலை செய்துள்ளது. நாங்கள் வாய்தா கேட்டு செல்லவில்லை.
திமுகவின் சுற்றுப்பயணத்தின்போது மக்களிடம் இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.