தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வெளியான சிசிடிவி காட்சி - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: செல்போன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபர்களை சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

cell shop owner attacked by Unidentified persons in tirupur
cell shop owner attacked by Unidentified persons in tirupur

By

Published : Mar 18, 2020, 5:12 PM IST

திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் செல்போன் கடை வைத்திருப்பவர் பட்டேல். இவர் நேற்று முன்தினம் தனது சகோதரருடன் கடைமுன்பு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், பட்டேலை சராமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையிலுள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல்

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கடையின் முன்பிருந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் ஆலய பங்கு பேரவை செயலாளருக்கு கத்திக்குத்து - சிசிடிவி காட்சி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details