தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் சிபிஐ ரெய்டு: வங்கி மோசடியில் திடீர் திருப்பம் - CBI police investigate

திருப்பூர்: பண மோசடியில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சிபிஐ காவல் துறையினர் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

businessman's home
businessman's home

By

Published : Dec 30, 2019, 8:30 AM IST

திருப்பூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் நடத்தும் பின்னலாடை நிறுவனத்திற்குத் தொழில்கடன் பெறுவதற்காக ஒரே ஆவணங்களை இருவேறு வங்கிகளில் சமர்ப்பித்து பண மோசடி செய்யததாகக் கூறப்படுகிறது.

மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலும் அவர் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தபோது, அவர் மோசடியில் ஈடுபட முயற்சி செய்ததை வங்கி அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில் சிபிஐ விசாரணை

இதனையடுத்து வங்கி அலுவலர்கள் சிபிஐக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிபிஐ அலுவலர்கள் எம்ஜிஆர் நகரிலுள்ள துரைசாமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி!

ABOUT THE AUTHOR

...view details