தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசைக் கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் - #CAA

திருப்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் வங்கியிலிருந்து தங்களது டெபாசிட் பணத்தை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CASH WITHDRAWAL PROTEST IN TIRUPUR
மத்திய அரசை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்

By

Published : Mar 16, 2020, 9:50 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் திருப்பூர் அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 31ஆவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி முன்பாக திரண்ட இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வங்கிக் கணக்கில் உள்ள டெபாசிட் பணத்தை எடுத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசைக் கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்

தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தக் கட்டமாக அனைத்து வங்கிகளிலும் உள்ள தங்களது டெபாசிட் பணத்தை எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் களமிறங்கும் விவசாயிகள் சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details