தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்எல்ஏ குணசேகரன் மீது அவதூறு பரப்பிய இருவர் கைது! - DMK Technical Division District Administrator arrest

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர், இருவரை கைது செய்துள்ளனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Oct 16, 2020, 9:28 PM IST

திருப்பூர்: எம்எல்ஏ குணசேகரன் மீது அவதூறு பரப்பிய எட்டு பேர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சிவளா தினேஷ் என்பவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ’திருப்பூர் வள்ளலார் நகர் வீதியில் வசிக்கும் அருண் ஜீவா(திமுக தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகி) என்பவர், கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் தெற்கு எம்எல்ஏ குணசேகரன் மீது தகாத சொற்களை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பி வருகிறார். அவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் அமைய உள்ள பயணிகள் நிழற்குடை, இன்னும் பணிகள் முழுமை பெறாமல் இருக்கும் நிலையில், இது சம்பந்தமான தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல, திருப்பூர் மாநகர அதிமுக வக்கீல் பிரிவு துணை தலைவர் தங்கவேலு அளித்த புகாரில், திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி லே அவுட்டில் , ஒன்றாவது வீதி மற்றும் முத்து விநாயகர் கோயில் வீதி ஆகிய வீதிகளுக்கு தண்ணீர் வசதி செய்து தருவதற்காக கைபம்பு அகற்றி, மின்மோட்டார் பொருத்தி, பைப் லைன் மற்றும் மோட்டார் அறையுடன் ரூ.7.70 லட்சம் மதிப்பில் குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த செலவு முழு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ஆனால் வெறும் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு ரூ.7.70 லட்சமா? என்ற ரீதியில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில விஷமிகள் பரப்பி வருகிறார்கள்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் இருக்கும் பயணியர் நிழற்குடை குறித்தும், தவறான தகவல்களை அவதூறாக பரப்பி வருகிறார்கள். இத்துடன் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் சயதியா ஸ்கூல் என்ற பள்ளியை நடத்தி வரும் அபுபக்கர் சித்திக் என்பவர், காங்கேயம் ரோடு விஜிவி கார்டன் பகுதிக்கு ரூ.255 கோடியில் குடிநீர் தொட்டி கட்டி இருக்கிறார்கள் என்று தவறாக மீம்ஸ் வெளியிட்டுள்ளார். எம்.எல்.ஏ., சு.குணசேகரனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஈஸ்வர் ஆனந்தம், இர்சத் அகமது, சையது அசரத், ஆனந்த், பார்த்திபன், அருணாசலம் ஆகியோர் அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவர் கைது

இந்த புகார்களின் பேரில் திருப்பூர் தெற்கு காவல்துறையினர் அருண் ஜீவா, ஆனந்த், ஸ்வர் ஆனந்தம், இர்சத் அகமது, சையது அசரத், ஆனந்த், பார்த்திபன், அருணாசலம் ஆகிய எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அருண் ஜீவா, ஆனந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள ஆறு பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அருண் ஜீவா திமுக தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளிநாடு மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் வாழ்க்கை பறிபோகிறதா?

ABOUT THE AUTHOR

...view details