கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே ஆந்திரா வங்கி கிளை உள்ளது. இதன் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் வேலையை முடித்து காருக்குத் திரும்பிய அவர், இடதுபுற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதன் பின்னர் காரை சோதனையிட்டபோது, காருக்குள் தான் வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து அவர், பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த காவலர்கள், காரை ஆய்வு செய்து அப்பகுதியில் இருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.