தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்துக்கும் மேற்பட்ட பைக்குகள் மீது மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம் - One killed in car accident in Thirumuruganpoondi

திருப்பூர்: கார் ஒன்று ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் படுகாயம் அடைந்தனர்.

Car Collided with five Bikes in Thiruppur
Car Collided with five Bikes in Thiruppur

By

Published : Apr 10, 2021, 10:07 AM IST

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீதும், சாலையில் நின்றிருந்தவர்கள் மீதும் மோதியது.

இதில் சாலையோரம் நின்றிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கார் மோதியதில் ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவை சேதமடைந்ததாகத் தெரிகிறது.

விபத்திற்கு காரணமான காரில் இருந்தவர்களைப் பிடித்து, காருடன் பூண்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்தார்களா எனவும், அவர்கள் யார் எனவும் பூண்டி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

பூண்டி சமிக்ஞையில் (சிக்னல்) காவல் துறையினர் இல்லாத காரணத்தால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details