திருப்பூர் மாவட்டத்தில் அரசு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 2,500 ரூபாயும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கியது.
இந்தாண்டு கனரா வங்கி ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 200 பள்ளி மாணவிகளுக்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளது.