திருப்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு அதன் ஊழியர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், புதிய முறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும், 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்
திருப்பூர்: ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7206186-thumbnail-3x2-dpi.jpg)
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!