திருப்பூர் பலவஞ்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகேயுள்ள குப்பைத்தொட்டியில் ஆகஸ்ட் 10ஆம் தேதி குழந்தை அழும் குரல் கேட்டு அப்பகுதியில் நடந்துசென்ற பாதசாரிகள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு விட்டு செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
குப்பையாய் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை! - undefined
திருப்பூர்: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சைல்டு லைன் அமைப்பினரால் மீட்கப்பட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை
தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சைல்டு லைன் அமைப்பினர் குழந்தையை மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில் சேர்த்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனை குழந்தைகள் சிறப்புப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.