திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணைப்பகுதி. திருப்பூர் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த இடத்திற்கு திருப்பூர் மட்டுமின்றி வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டு அங்கிருந்து படகுகள் இயக்கப்பட்டுவந்தது.
ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இந்நிலையில் கடந்த பல மாதங்களாக படகு இல்லம் செயல்படாமல் மூடியே கிடக்கின்றது. படகு இல்லம் திறக்கப்படாமல் மூடியே உள்ளதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்து மகிழ முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.
மேலும் அணைப்பகுதியும் பராமரிப்பின்றி போதுமான நாற்காலிகளும் இல்லாமல் இருப்பதால், அமர்வதற்குகூட இடமின்றி சாலை ஓரங்களிலும் அணைப் பகுதியிலுள்ள சுவர்களிலும் ஆபத்தான முறையில் அமரும் சூழ்நிலைக்குத் சுற்றுலாப் பயணிகல் தள்ளப்பட்டுள்ளனர்.
நல்லமுறையில் இயங்கிவந்த படகு இல்லத்தை மீண்டும் இயக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.