தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கிருமி நாசினி தெளிப்பு! - ஆட்சியரின் உத்தரவின் பேரில் கிருமி நாசினி தெளிப்பு

திருப்பூர்: மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஊராட்சிக்குட்பட்ட ஒன்பது கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்க்கப்பட்டது.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் கிருமி நாசினி தெளிப்பு
ஆட்சியரின் உத்தரவின் பேரில் கிருமி நாசினி தெளிப்பு

By

Published : Mar 28, 2020, 8:14 AM IST

கரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக ஊராட்சிகளில் தூய்மை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட நல்லாகவுண்டன்பாளையம், கள்ளகினர், அறிவொளி நகர், சிங்கனுர் உள்ளிட்ட 9 கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தது.

கிருமி நாசினி தெளிப்பு

அதனைத்தொடர்ந்து மாதப்பூர் ஊராட்சிமன்ற தலைவர் அசோக்குமார் தலைமையில் மாதப்பூர் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.

கிராமங்களிலுள்ள அனைத்து வீதிகளிலும், வீடுகளிலும் இந்த பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. இந்தப் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

செய்தியாளரை சந்தித்த ஊராட்சி மன்றத் தலைவர்

மேலும் இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கழிவுநீர் தேங்காமல் தெருக்களில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் தெளிக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் கரோனாவா?' - கிருமி நாசினி தெளிப்பு

ABOUT THE AUTHOR

...view details