சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டம், அரசின் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற பிப்.25ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த சூழலில் அதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.
இதையடுத்து, திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர். “இந்தியாவின் தென்பகுதியில் (புதுச்சேரி) இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் ஆட்சியும் கவிழக்கூடிய சூழலில் உள்ளது. ராகுல்காந்தி வந்து சென்ற ராசியாகக்கூட இருக்கலாம். தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்றால் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம்.
காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற கடனை அடைப்பதற்காக மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலை ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரிக்குள் கொண்டு வரும்பட்சத்தில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விரைவில் விலை உயர்வை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.