திருப்பூர் மாவட்டம் வளையங்காடு பகுதியில் பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதன் மாநில துணை தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பாஜகவின் ஆறு வருட சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துக் கூறுவதற்காக, இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாஜக ஆட்சியின் மூலம் இந்திய மக்கள் அனைவரும் பயன்பெற்றிருக்கிறார்கள்.