தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்' - சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடிக் கருத்து! - பாஜக திருப்பூர்

திருப்பூர்: தீவிரவாதத்தை ஒடுக்க ஒட்டுமொத்த நாடுகளின் குரலாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்ந்து வருகிறார் என, காந்தி ஜெயந்தி பாதயாத்திரையைத் தொடங்கி வைத்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாஜக பாத யாத்திரை

By

Published : Oct 2, 2019, 5:59 PM IST

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள், இன்று பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் பாஜகவினரின் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்த அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருப்பூர் பாஜக பாத யாத்திரை

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தற்போது தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போரைத் துவக்கி உள்ளார் எனவும், உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை தனிமைப்படுத்துவதன் மூலமாக, தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் எனவும் கூறினார். மேலும் தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகளின் ஒட்டுமொத்தக் குரலாக, பிரதமர் நரேந்திர மோடியின் குரல் உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details