திருப்பூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம், தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (அக்.09) நடைபெற்றது. அதில் பாஜக மாநில இளைஞரணித் தலைவர் செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவு இளைஞர்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.
அதன் தாக்கம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிய வரும். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணியே தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இக்கூட்டணி வெற்றி பெறும். அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு அவர்களுடைய கட்சியினுடையது. அதற்கு பாஜக கருத்து சொல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.