தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் முன் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை அசால்டாக திருடிய ஆசாமிக்கு போலீஸ் வலை - cctv visuals released

திருப்பூர்: வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bike theft
சிசிடிவி

By

Published : Jan 29, 2021, 9:01 AM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர் வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை நேற்று (ஜன.29) வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர் சிறிது நேரம் அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி திடீரென தனது கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு இருசக்கர வாகனத்தின் லாக்கை திறந்தார்.

சிசிடிவி

இதைத் தொடர்ந்து ஆள் நடமாட்டத்தை கவனித்து மெதுவாக இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்றுவிட்டார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த ஆதாரங்களை சமர்ப்பித்து அஜய் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:‘தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கும் கும்பல்’ - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details