திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தனியார் நுால் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர், கார்த்திக் (வயது 25). இவர் நேற்று திருப்பூர் ரோட்டிலுள்ள வங்கியில், மூன்று லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு, பசுபதி வீதியிலுள்ள பிளாஸ்டிக் கடைக்கு வந்துள்ளார்.
இவர் ஓட்டி வந்த ஸ்கூட்டியின் சீட்டிற்கு கீழ் பணத்தைவைத்து, பூட்டிவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, சீட்டுக்கு அடியில் தான் வைத்துவிட்டுச் சென்ற பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
வண்டி சீட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை இது குறித்து உடுமலை போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்ததையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு பேர் கார்த்திக்கை பின் தொடர்ந்து வந்ததும், பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில், மூன்று லட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் லாவகமாகத் திருடிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.