தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு 25 பேட்டரி வாகனங்கள் வழங்கல்! - பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர்

திருப்பூர்: பல்லடம் ஒன்றியத்தில் குப்பைகளைச் சேகரிக்க தூய்மைப் பணியாளர்களுக்குப் பேட்டரி வாகனங்களை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேட்டரி வாகனங்கள்
பேட்டரி வாகனங்கள்

By

Published : Jul 18, 2020, 1:08 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 கிராம ஊராட்சியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 850 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் 148 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் பல்லடம் வட்டாரத்திலுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளைச் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக், பீங்கான் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போட பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

இந்தப் பணியாளர்கள் தள்ளு வண்டி மூலமாக சென்று வரும் பொழுது மிகுந்த காலதாமதமும், பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை போக்கும் விதமாக பல்லடம் ஒன்றியத்திற்கு 44 பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டன.

அதன்படி முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 25 பேட்டரி வாகனங்களை 62 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா, மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி, கூட்டுறவு மார்க்கெட்டிங் தலைவர் சித்துராஜ், பல்லடம் ஊராட்சி தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details