‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். உலகின் 79 சதவீதப் பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. நிலப்பரப்பிலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் உள்ளன. தண்ணீரின் தேவையானது அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமானது என்ற போதிலும், அவை கிடைப்பதென்பது அனைத்துப் பகுதியினருக்கும் சமநிலையானதாக இல்லை.
இந்தியாவின் பல மாநிலங்களில் தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் என்று பல காலமாகக் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தண்ணீரின் தேவை நிலை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிக் கொண்டே போகிறது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு மழை குறைவு, புவி வெப்பம் போன்ற காரணங்களால் சரிந்து கொண்டே போகிறது. இது எதையும் கண்டுகொள்ளாமல் திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் சாலையில் வீணாகிவருகிறது.
மாநகராட்சி குடிநீர் குழாயில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள பங்களா பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பாபா மெடிக்கல்ஸ் பக்கம் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி அலுவலர்கள் குழியைத் தோண்டியுள்ளனர். ஆனால் அந்தக் குழியை அதன் பிறகு மூடாமல் விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இதனால் சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வந்தது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் காலை 8.30 மணிளவில் உடைந்து வீணாகும் குடிநீர் குழாயில் இறங்கி சோப்புப் போட்டுக் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குழாய் உடைப்பால் பல லட்சம் தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. தனது போராட்டத்திர்கு பின்பாவது மாநகராட்சி இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘இது வெறும் ’இன்டர்வெல்’ தான், ’கிளைமேக்ஸ்’க்கு இன்னும் 12 மாசம் இருக்கு’ - உதயநிதி ஸ்டாலின்