திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரசீத் (39). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்துவரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் அப்துல் ரசீத் அதே பகுதியைச் சேர்ந்த, 5ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது! - Sexual abuse
திருப்பூர்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
10வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; பனியன் கம்பெனி தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது!
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஷீத்தைக் கைது செய்தனர்.