தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை - திருப்பூர் சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

திருப்பூர்: பெரியார் காலனி பகுதியில் கேட்பாரற்று சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

baby girl rescued from tiruppur road
baby girl rescued from tiruppur road

By

Published : May 23, 2020, 5:48 PM IST

திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் இன்று சாலையோரமாக தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தைகள் நல துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து அவர்கள் குழந்தையை தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறந்த பச்சிளம் குழந்தை சாலையில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... குழந்தை உடலில் உடைந்த ஊசி; ஊரக சுகாதாரப்பணி இயக்குநருக்கு நோட்டீஸ்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details