சேலத்தில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், தவேரா காரில் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றனர். அவிநாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த தவேரா கார் முன்னால் சென்றுகொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் கார் நொறுங்கியது. அதில் பயணம்செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஸ் (21), சூர்யா (21), வெங்கட் (21) இளவரசன் (21), சின்னசேலத்தைச் சேர்ந்த வசந்த் (21), கார் ஓட்டுநர் உள்ளிட்ட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிமெண்ட் லாரி மீது மோதி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழப்பு இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். தீயணைப்புப் படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி காருக்குள் சிக்கியிருந்த ஆறு பேரின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், காயமடைந்த மூவரை மீட்டு, சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து தொடர்பில் வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். லாரி மீது கார் மோதிய விபத்தில் மாணாக்கர் உள்பட ஆறு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :கடலூர் மாணவன் கொலை வழக்கில் மேலும் ஐவர் கைது