திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி, இவர் அப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஏலச்சீட்டு மற்றும் பலகாரச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இவரிடம் அப்பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் சீட்டில் பங்குதாரர்களாக சேர்ந்து மாதாமாதம் பணம் கட்டி வந்துள்ளனர். இதனிடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே சீட்டு காலம் முடிந்த நிலையில். பணம் செலுத்திய பொதுமக்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.