திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் அதேப் பகுதியில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், ரூ.10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி: ஒரு வீட்டில் திருடப்பட்ட 5 சவரன் நகைகள், பணம்! - Attempted robbery in adjoining houses in Tirupur
திருப்பூர்: போயம்பாளையம் பகுதியில் வீடுகளில் புகுந்து அடையாளம் தெரியாத நபர் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை நடந்த வீடுகள்
இன்று காலையில் வழக்கம்போல் கதிர்வேல் பீரோவைத் திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணம் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அவரது பக்கத்து வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
house theft issue