தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு - திருப்பூர் மாவட்டம் உடுமலை

திருப்பூர்: உடுமலையில் இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலையில் இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்த வாலிபருக்கு அரிவாளில் வெட்டு
உடுமலையில் இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்த வாலிபருக்கு அரிவாளில் வெட்டு

By

Published : Aug 28, 2020, 3:16 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ஸ்ரீ வெங்கடாசலம் வீதியில் நேற்று (ஆகஸ்ட் 27) மாலை சொகுசு காரில் வந்த முகமது அலி என்ற இளைஞர், அவ்வழியாக வந்த இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சொகுசு காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், முகமது அலியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு, முகமது அலியை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த முகமது அலி, அங்கிருந்து தப்பி ஓடி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதனிடையே அரிவாளில் வெட்டிய நபர்கள், அந்த இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு தப்பியோடினர்.

முகமது அலிக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின் மேல் சிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details