திருப்பூர் மாவட்டம், பல்லடம் செட்டிபாளையம் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்நிலையில், மேற்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இந்தக் கடையில் சம்பவத்தன்று மது அருந்தினார். இதனால் மூர்த்திக்கு குடிபோதை அதிகமாகியுள்ளது.
சாராயம் கேட்டு தன்னைத்தானே பாட்டிலால் தாக்கிக் கொண்டவர் கைது! - திருப்பூர்
திருப்பூர் : மதுக்கடையில் பணம் இல்லாமல், மது கேட்டு தன்னைத்தானே தாக்கிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பாட்டிலால் தன்னைத்தானே தாக்கிய நபர்.
மேலும், மது வாங்க பணம் இல்லாததால் மதுக்கடையின் முன்பு, கீழேயிருந்த மது பாட்டிலை எடுத்து தலை, கழுத்து பகுதிகளில் தன்னைத்தானே தாக்கிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், சூழ்நிலையை கருத்தில் கொண்டு லாவகமாகப் பேசி அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Last Updated : Sep 11, 2019, 8:26 AM IST