திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால், இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக காலை மூன்று மணிக்கே காவல்துறையினர் ரயில் நிலையம் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி ரயில் நிலையம் வந்த அஸ்ஸாம் தொழிலாளர்களிடம் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படாது என்று கூறி காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.