தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 15, 2020, 7:11 PM IST

ETV Bharat / state

இஸ்லாமியர்கள் மீதான தடியடியைக் கண்டித்து திருப்பூரில் போராட்டம்

திருப்பூர்: சிஏஏவுக்கு எதிராக சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்லாமியர்கள் மீது தடியடியைக் கண்டித்து திருப்பூரில் போராட்டம்
இஸ்லாமியர்கள் மீது தடியடியைக் கண்டித்து திருப்பூரில் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். காவல் துறையினரின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து திருப்பூர் அறிவொளி சாலை பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள சிடிசி கார்னரிலும் திரண்ட ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக திருப்பூர்-காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் மீது தடியடியைக் கண்டித்து திருப்பூரில் போராட்டம்

சென்னையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர்.

இதையும் படிங்க: 'ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் விமர்சனத்திற்கு ஆளாகிறார்' - செ.கு. தமிழரசன்

ABOUT THE AUTHOR

...view details