தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையானது ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர், டெக்னீசியன் உள்பட 5000க்கும் மேலானோர் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அப்ரைசல் என்ற முறை இருந்ததை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
ஊதிய உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கி ஆர்ப்பாட்டம் - திருப்பூர்
திருப்பூர்: வருடாந்தர ஊதியம் வழங்காததைக் கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வழங்கினார்

அதன் அடிப்படையில் அந்த முறை ஒழிக்கப்பட்டு வருடாந்திர ஊதிய உயர்வு கொண்டு வந்ததாகவும், மேலும் இந்த வருடத்திற்கான ஊதிய உயர்வு இன்னும் வழங்கவில்லை என்ற செய்தியை நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து , தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம் என கூறிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தாங்கள் செய்யும் வேலை பொதுமக்களுக்காகத்தான். எனவே, இதனை அவர்களுக்கு தெரியப்படுத்தவே நோட்டீஸ் வழங்குவதாக தெரிவித்தனர்.